தோனிக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்

மற்றவர்கள் அழுத்தம் கொடுப்பதற்கு தோனி தாமாகவே அணியில் இருந்து வெளியேற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இருந்தே தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர். ஆனால் இதற்கு தோனி தற்போது வரை பதில் அளிக்காமல் இருந்து வருகிறார்.

 

இந்த நிலையில் தோனிக்கான நேரம் நெருங்கி விட்டது எனவும் அவரது எதிர்காலம் குறித்து அனைவருக்கும் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது எனவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதோடு தோனிக்கான மாற்று வீரர்களாக ரிஷபந்த், சஞ்சு சாம்சன் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட கவாஸ்கர் உலக கோப்பை டி20 போட்டியில் தோனி பதிலாக இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக கூறினார்.

மேலும் ரிஷபம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் மற்றவர்களிடமிருந்து அழுத்தம் பெறுவதற்குள் தோனி தாமாக முன்வந்து ஓய்வு குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.


Leave a Reply