பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்துக்கு துள்சி கப்பார்ட் வரவேற்பு

பிரதமர் மோடியின் அமெரிக்க வருகையை வரவேற்றுள்ள துள்சி கப்பார்ட் அதேசமயம் ஒரு நிகழ்ச்சிக்கு தன்னால் வர இயலாது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் முதல் இந்து உறுப்பினர் ஆவார். பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினர் சந்திக்கும் நிகழ்வு ஏற்கனவே திட்டமிட்ட தேர்தல் தொடர்பான பிரச்சாரத்தின் காரணமாக தன்னால் வர இயலாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துள்ள துள்சி கப்பார்ட் இந்திய பிரதமர் மோடியை அமெரிக்காவிற்கு வரவேற்பதாகவும் முடிந்தால் அவரை நேரில் சந்தித்து பேசி இருப்பதாகவும் கூறினார்.

 

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நட்பு நாடு என்று குறிப்பிட்டுள்ளார் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பருவநிலை மாற்றம், அணு ஆயுத போர் தடுப்பு, அணு ஆயுத பெருக்கம் மற்றும் பொருளாதாரத்தில் மூலம் மக்கள் வாழ்வை மேம்படுத்துதல் உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகளைச் இணைந்து பணியாற்றுவது தொடர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

உலகமே ஒரு குடும்பம் என பொருள்படும் வெறுப்பு, அறியாமை, பாரபட்சத்திற்கு இடமளிக்காமல் வளர்ச்சி, வளம், வாய்ப்பு, சமத்துவம், அறிவியல், சுகாதாரம், சூழலியல், பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பில் கவனம் செலுத்தி இருநாடுகளின் பலமான நீண்ட நட்பை மேம்படுத்தவும் கேட்டுக்கொண்டார். இதனிடையே அமெரிக்க வரலாற்றிலேயே அயல் நாட்டு அரசு தலைவருக்காக பிரம்மாண்டமாக நடத்தப்படும் முதல் நிகழ்வாக மோடி நிகழ்ச்சிக்கு போஸ்டரில் பிரமாண்டமான அரங்கம் தயாராகிவருகிறது.


Leave a Reply