தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .இந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

 

விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்று கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கேகே நகர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. புகுந்த மல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

 

மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 23ம் தேதி முதல் தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கு முன்பதிவு தொடங்கும் என்று கர்நாடகம் செல்வோருக்கான சிறப்பு பேருந்து ஏற்பாடு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply