சமூக வலைதள நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என அந்நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய சட்டங்களை பின்பற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஒருவர் தொடர்ந்த வழக்கில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்களால் ஏற்படும் சைபர் குற்றங்களை தடுப்பதற்கு சமூக வலைதள கணக்குகள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரிக்கை வைத்திருந்தார்.

 

ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது வாட்ஸ்அப் தரப்பில் தங்கள் பெயரில் பரப்பப்படும் கருத்துகளுக்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்ற தகவலை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்திருந்தது. அதனை படித்து பார்த்த நீதிபதிகள் ஒரு செயலியை மக்கள் பயன்படுத்தும் போது அந்த செயலை தான் அதற்கு பொறுப்பாக வேண்டும் அந்த செயலியில் பரப்பப்படும் தகவல்களுக்கு பொறுப்பு ஏற்க முடியாது என வாட்ஸ்அப் நிறுவனம் கூற முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

 

வாட்ஸ்அப் நிறுவனம் மற்ற நாடுகளில் அதனுடைய சட்டங்களை ஏற்று நடக்கும் பொழுது இந்தியாவிலுள்ள சட்டங்களை கடை பிடித்து தான் ஆகவேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் அது கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களை கண்காணிப்பு அமைப்பு உள்ளதா என்று மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மத்திய அரசு வழக்கறிஞர் சமூக வலைதளங்களை கண்காணிப்பதற்கும் தவறான தகவல்கள் கண்டறியப்பட்ட அதனை அப்புறப்படுத்த இருக்கும் ஒரு சட்டம் இயற்ற இருப்பதாகவும் அது தொடர்பாக இறுதி முடிவு காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.


Leave a Reply