9 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு 4 ஆண்டு சிறை

9 ஆம் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் வாலிபருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை இராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் துரத்தியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் பாலமுருகன்,27. இவர் கூலித்தொழிலாளி . இவர் கடந்த 29.2.2016 அன்று 9-ம் வகுப்பு படித்து வந்த, 14 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

 

மாணவியின் புகாரில், பரமக்குடி மகளிர் போலீசார், பாலமுருகனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில் பாலமுருகனுக்கு, மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.


Leave a Reply