திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீராமபுரத்தில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக வந்த திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த கார்த்திக்(23)த.பெ. கண்ணன் மற்றும் வடமதுரை மொட்டனம் பட்டியைச் சேர்ந்த முத்துலட்சுமியின் மகன் கருப்புசாமி(24) ஆகிய இருவரும் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீராமாபுரத்தில் தனது நண்பனின் அக்கா திருமணத்திற்காக வந்து கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி சென்ற போது ஆண்டர்சன் பட்டி பிரிவு அருகே திருப்பூரில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளாகினர்.
இந்த விபத்தில் கார்த்திக் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கருப்புசாமி ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார், இந்த நிலையில் தகவல் அறிந்து விரைந்து வந்த கன்னிவாடி போலீசார் பிரேதத்தை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து கன்னிவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.