கார் விற்பனை நிறுவன அதிபர் ரீட்டாவின் இறப்பு கொலையா?

கார் விற்பனை நிறுவன அதிபர் ரீட்டாவின் இறப்பில் காவல்துறையினருக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளன. தற்கொலை செய்து கொண்டதாக கூறும் ரீட்டாவின் முகத்தில் ரத்த காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது .அதேபோல அவர் உடல் ஜன்னல் திரைச்சீலை கம்பியில் தொங்கிய நிலையில் இருந்ததால் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ரீட்டா தற்கொலை செய்து கொண்ட அறையின் கதவை உட்புறமாக தாழிட்டு இருந்தாலும் ஆளுயர ஜன்னலும் தாழ் போடாமல் இருந்தது. காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .மிகப்பெரிய செல்வந்தராக கார் விற்பனை தொடர்ந்து ஏற்பட்ட சரிவினால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் புகார் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply