அமெரிக்காவிற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 வது நாளாக உயர்வு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஏழாவது நாளாக இன்று 26 காசுகள் உயர்ந்துள்ளது. இன்றைய அந்நிய செலவாணி வர்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் உயர்ந்து 70 ரூபாய் 88 காசுகள் ஆனது. நேற்றைய வர்த்தக முடிவில் ரூபாய் மதிப்பு 52 காசுகள் அதிகரித்து 71 ரூபாய் 14 காசில் நிறைவு பெற்றிருந்தது. கடந்த 6 நாட்களில் ரூபாயின் மதிப்பு 125 காசுகளாக உயர்ந்துள்ளது.


Leave a Reply