இரவு நேர காவல் பணியில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள்!

சென்னையில் கல்லூரி மாணவர்கள் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காவல்துறையுடன் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் பாதுகாப்புத்துறையின் ஈடுபடலாம் என்றும் விருப்பமுள்ள கல்லூரிகள் காவல் துறையை தொடர்பு கொள்ளலாம் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் அறிவித்திருந்தார்.

 

அதன்படி லயோலா கல்லூரியில் சேர்ந்த 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியின்போது கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு நுங்கம்பாக்கம், சூலமேடு ஆகிய பகுதிகளில் வாகன சோதனை இருந்து பணி போன்றவற்றில் ஈடுபட்டனர்.


Leave a Reply