பேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் சுய விவரங்கள் மற்றும் செல்போன் எண்கள் இணையதளங்களில் கசிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாடு காரணமாக அதனை பயன்படுத்தும் 41 கோடி பேரின் தகவல்கள் இணையத்தில் கசிந்து உள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த என்ற செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
பயனாளர்களின் சுய விவரங்களுடன் அவர்களது செல்போன் எண்களும் இணையத்தில் உலா வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பதிமூன்று கோடி பேர் மற்றும் இங்கிலாந்து நாட்டின் ஒரு கோடியே 80 லட்சம் பேர் மற்றும் வியட்நாமை சேர்ந்த 5 கோடி பயனாளர்களின் தகவல்கள் இணையத்தில் கசிய விடப்பட்டுள்ளது.
செல்போன் எண்கள் இணையத்தில் கசிந்து உள்ளதால் பயனாளர்கள் தேவையற்ற அழைப்புகளை ஏற்கும் சிக்கலுக்கு உள்ளாகின்றனர். பாதுகாப்பு குறைபாடுகளால் தகவல்கள் திருடப்பட்டதாக விளக்கமளித்த ஃபேஸ்புக் நிறுவனம் அவை அனைத்தும் பழைய தகவல்கள் என்றும் கூறியிருக்கிறது.