கடலில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகள்!

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் வைத்து வழிபட்ட பிள்ளையார் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி கடந்த 2ஆம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி பல வண்ணங்களில் பல்வேறு விதங்களில் விநாயகர் சிலையை வாங்கிய மக்கள் வீட்டில் வைத்து வழிபட்டனர். சிறப்பு பூஜைகளுக்கு பின் அந்த சிலைகளை கடலில் கரைக்கும் பணிகள் தொடங்கின சென்னையை பொறுத்தவரை சுமார் 2600 சிலைகள் வைக்க காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

அந்த சிலைகள் காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடலில் கரைக்கப்பட்டன. இதற்காக காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விடுமுறை தினங்களில் ஏராளமான சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply