ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அன்னூரில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.50 க்கும் மேற்பட்டோர் கைது

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.இந்நிலையில் இதனை கண்டித்து நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

 

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் அன்னூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமையில் பயணியர் மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக விரோதமாக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரையும் அன்னூர் காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.பின்னர்,அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தடையை மீறி அன்னூரில் காங்கிரஸார் நடத்திய ஆர்ப்பாட்டத்தி் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Leave a Reply