பசுமாட்டை பாலியல் வன்கொடுமை செய்த வட மாநில இளைஞர்கள்!

திருப்பூர் அருகே பசுமாட்டை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பெருமாக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி கந்தசாமி. இவருக்கு சொந்தமான பசுமாடு தினந்தோறும் காலையில் சோர்வாக காணப்பட்டுள்ளது.

 

நேற்று இரவு வழக்கம் போல் பசுமாட்டை வீட்டின் வெளியில் கட்டிப்போட்டுவிட்டு கந்தசாமி உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வெளியே வந்த கந்தசாமி .பசு மாட்டை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடியபோது அருகே இருந்த கோழி பண்ணையில் இருந்து பசு மாடு வேதனையுடன் கத்தும் சத்தம் கேட்டுள்ளது.

இதை எடுத்து அங்கு சென்று பார்த்த போது மூன்று இளைஞர்கள் பசுமாட்டை பாலியல் வன்கொடுமை செய்து வந்தனர். அதிர்ச்சி அடைந்த கந்தசாமி பொதுமக்களின் உதவியுடன் மூன்று இளைஞர்களையும் மடக்கி பிடித்துள்ளார். மூன்று பேரையும் கட்டி வைத்து அடித்து உதைத்த பொதுமக்கள் பல்லடம் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

விசாரணையில் மூன்று இளைஞர்களும் ஒரிசாவில் சேர்ந்தவர்கள் என்பதும், தினந்தோறும் நள்ளிரவில் கயிற்றால் கட்டப்பட்டு இருக்கும் பசுமாட்டை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி சித்திரவதை செய்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply