சென்னையில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனையடுத்து அடுத்த மூன்று நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

சென்னையில் நேற்று பகலில் வெயில் வாட்டிய நிலையில் மாலையில் கிண்டி, அடையாறு, திருவல்லிக்கேணி, திருவான்மியூர், மீனம்பாக்கம், மாதவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதேபோல் கோயம்பேடு., அசோக்நகர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் பெய்ததால் வெப்பம் தனிந்தது.

 

அதிகபட்சமாக தரமணியில் 46 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் 2ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Leave a Reply