மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் முறைகேடாக பட்டம் வழங்கி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உரிய முறையில் தேர்வு எழுதி வென்று அதற்கான பட்டம் வழங்கப் படாமல் முறைகேடாக பெற்றதாக புகார்கள் எழுந்தன.
அதனடிப்படையில் விசாரணையின் முறைகேடாக பட்டம் வழங்குவதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ஆய்வு நடத்தி முறைகேடாக பட்டங்களை வழங்கியதற்காக பொறுப்பானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் வாணி என்பவர் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் அதனை ரத்து செய்து தனது ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில் தனியார் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பிஎஸ்சி வேதியல் படிப்பில் இரண்டு ஆண்டுகள் கழித்த நிலையில் மூன்றாம் ஆண்டில் படிப்பை பாதியில் விட்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்., தொலைநிலை கல்வியில் வரலாறு படைத்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து b.ed முடித்த நிலையில் அவர் பெற்ற வரலாறு பட்டம் செல்லாது என கூறிய ஆசிரியர் பணிக்கு நிராகரித்துள்ளனர். ஆகவே அதனை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பல்வேறு பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு எதிரான கட்டங்கள் விளங்குவது நடைபெற்று வருகிறது. பட்டங்களை பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு எதிராக வழங்குகின்றன இதற்காக மாணவர்களிடம் பணம் பெறப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.