திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரை நடத்துநர்கள் 5க்கும் மேற்பட்டோர் சூழ்ந்துகொண்டு சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேனி செல்வதற்காக பயணி ஒருவர் அரசு பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த பேருந்து நடத்துனர் சீருடை மாற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு அங்கு அமர்ந்திருந்த பயணி எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து சக நடத்துனர்கள் அந்த பையனை சூழ்ந்து நடத்தினர் ஆதரவாக தாக்குதலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் தாக்குதலுக்கு உள்ளான பயணி மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட ஓட்டுநர்களையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அடிவாங்கிய பயணியின் பெயர் விஜய் என்பதும் அவர் மதுபோதையில் இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.