8 அடி நீள சாரைப்பாம்பை எரித்த வனத்துறையினர்!

திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 8 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை வனத்துறையினர் உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் சுற்றித்திரிந்த சாரைப்பாம்பை கண்ட பொதுமக்கள் அதனை விரட்டியுள்ளனர்.

இதனையடுத்து பாம்பு அருகிலுள்ள தொட்டி ஒன்றில் தவறி விழுந்துள்ளது. பாம்பை பிடிக்க சென்ற வனத்துறை ஊழியர்கள் பாம்பை தொட்டியில் இருந்து நீக்காமல் அப்படியே தீ வைத்து எரித்து கொன்றுள்ளனர். இந்தச் சம்பவம் உயிரினங்கள் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply