தன் பாலின ஈர்பாளர்களுக்கு புதிய ஆப்! மோசடி செய்த கும்பல்!

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறது ஒரு கும்பல். பாதிக்கப்பட்ட பேராசிரியர் ஒருவர் அளித்த புகாரில் வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கல்லூரி பேராசிரியர் ஒருவர் அண்மையில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார்.

 

அதில் தன்னை ஒரு கும்பல் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பதாக தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டபோது பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரியவந்தன. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தன்பால் ஈர்க்கும் வகையில் ஒரு கும்பல் கிரிண்டர் என்ற மொபைல் ஆப் உருவாகியுள்ளது.

 

இந்த ஆப்பின் மூலம் 300 க்கும் மேற்பட்டோர் இணைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதில் தொழிலதிபர்கள் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட ஏராளமானோர் இந்த ஆப் மூலம் தொடர்பு கொண்டு தன் பாலின ஈர்ப்பாளர்களை தனிமையில் சந்திக்கும்போது உருவாக்கிய கும்பல் அவர்களை வீடியோ எடுத்துள்ளது. பின்னர் இந்த வீடியோக்களை காட்டி மிரட்டி அந்த கும்பல் அவர்களிடமிருந்து பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு உள்ளது.

 

இப்படி பாதிக்கப்பட்ட பேராசிரியர் ஒருவர் காவல்துறையில், இதுகுறித்து புகார் அளித்ததால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த கும்பலின் தலைவன் முத்துப்பாண்டி என்பவனையும் தினேஷ் என்பவரையும் கைது செய்துள்ளனர்.

 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விருப்பத்தின் பெயரில் தன்பாலின உறவு வைத்துக்கொள்ளும் நபரை தண்டிக்க முடியாது எனவும் கூறியுள்ளனர்.


Leave a Reply