உணவை வீணாக்காமல் சாப்பிட்டால் கேஷ்பேக் என அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது கோவையை சேர்ந்த உணவகம் ஒன்று. கோவையில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பாட்டு இந்த அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
உணவை வீணாக்காமல் சாப்பிடுவோருக்கு ஐந்து ரூபாய் நாணயம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கேஷ்பேக் ஆஃபர் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 80 ஆண்டுகளாக கோவையில் உணவகம் நடத்தி வரும் இந்த நிறுவனம் பல வாடிக்கையாளர்கள் உணவை வீணடிப்பதை கண்டு மனம் வேதனைப்பட்டு இந்த முயற்சியை எடுத்துள்ளார்.
உணவகத்தில் மூன்று கிளைகளிலும் இந்தத் திட்டம் தொடங்கி ஒரு வார காலமே ஆன நிலையில் ஐந்து ரூபாய் கிடைக்கும் என்பதால் எனக்கு தேவையானதை மட்டும் கேட்டு வாங்குவதாக கூறுகிறார்கள் உணவக உரிமையாளர்கள்.