ஜம்மு-காஷ்மீரில் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுவதாக கூறி மத்திய அரசு பணியில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பதவி விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கோட்டயத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன், கடந்த ஆண்டு மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது சிறப்பான சேவை செய்வதற்கான சமூக வலைத்தளத்தில் புகழப்பட்டவர்.
தற்போது யூனியன் பிரதேசத்தில் எரிசக்தி நகர்ப்புற மேம்பாடு மற்றும் வேளாண் துறை செயலாளராக பணியாற்றி வருபவர் கண்ணன், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார்.
ஒடுக்கப்படும் மக்களின் குரலாக தான் இருக்க விரும்புவதாக கூறியுள்ள கண்ணன் கோபிநாதன், ஐஏஎஸ் பதவி தனது கருத்து சுதந்திரத்தை பறித்து விட்டதாக தெரிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்சினையில் நாட்டின் குறிப்பிட்ட பிரிவினரின் அடிப்படை உரிமைகள் முழுவதுமாக நீக்கப்படும்போது கூட யாரும் குரல் எழுப்பவில்லை என்று தெரிவித்த அவ,ர் தான் இதில் ஒரு அங்கமாக இருக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.