இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க கோரிக்கை

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டுக்குழுவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், கீழமை நீதிபதிகளுக்கு உடனடியாக நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்றும், பல்வேறு கோரிக்கைகளை செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய வழக்கறிஞர்கள் சங்க கூட்டுக் குழுவின் தலைவர் நந்தகுமார் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


Leave a Reply