கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அ௫ண் ஜெட்லி மறைவுக்கு கோவை பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
முன்னாள் மத்திய அமைச்சர் அ௫ண் ஜெட்லி மறைவுக்கு கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அருண் ஜேட்லியின் உருவப்படத்திற்கு மலர்தூவி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர்,ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இக்கூட்டத்தில் ராஜா மாநில துணை தலைவர் , கனகசபாபதி மாநில செய்தி தொடர்பாளர், கல்யாண சுந்தரம் தேசிய பொதுக்குழுக் உறுப்பினர், சின்ராஜ் தேசிய பொதுக்குழு உறுப்பினர், ரமேஷ் மாவட்ட பொதுச்செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.