பிரதமர் நரேந்திர மோடியின் துதிபாடி பிழைக்க வேண்டும் என நினைப்பவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலக வேண்டும் என காங்கிரஸ் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெய்ராம், ரமேஷ் அவர்களின் சிறுசிறு நடவடிக்கைகளை பொதுவெளியில் பாராட்டி கருத்து தெரிவிப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
இவர்களது சந்தர்ப்பவாதமும், சுயநலமும் மோடிக்கு ஆதரவான கருத்துக்கள் மூலம் அம்பலமாகியுள்ளது, கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுபோன்ற கருத்துக்கள் போர்க்களத்தில் பாஜகவை எதிர்த்து போராடுகிற தொண்டர்களின் மனவுறுதியை சீர்குலைத்து விடும் என்றும், இத்தகைய குறைகளை உடனடியாக அடையாளம் கண்டு விரைந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.