தமிழகத்திலேயே முதன் முறையாக பசுமை பட்டாசு !

தமிழகத்திலேயே முதன் முறையாக பசுமை பட்டாசு தயார் செய்வதற்கான ஆராய்ச்சி ஆய்வகம் விருதுநகர் மாவட்டம் அம்பத்தூரில் செயல்படத் துவங்கியுள்ளது. பசுமை பட்டாசு இந்த வாரத்தை கடந்த ஆண்டு இதே நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று.

 

தமிழகத்தில் பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும், என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தான் இந்த பரபரப்புக்கு காரணம். கடந்த ஓராண்டாகவே பசுமை பட்டாசு தயாரிப்பு தொடர்பான ஆய்வுகளில் பட்டாசு தயாரிப்பாளர்கள் மத்திய அரசு விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வந்தனர். இதன் பலனாக சிவகாசியில் பசுமை பட்டாசு குறித்து ஆய்வு பயிற்சி மற்றும் சான்றிதழுக்கான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.

 

பசுமை பட்டாசு தொடர்பான ஆய்வு இதுவரை நாக்பூருக்கு மட்டுமே சென்று வந்த நிலையில் இனி சிவகாசி அருகே உள்ள ஆமத்தூர் இடம் இந்த ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என்பது பெரிய ஆறுதல்.இந்த ஆய்வகத்தின் மூலம் ஆயிரத்து 70 பாடசாலைகள் பயன் பெறுகின்றனபசுமை பட்டாசு தொடர்பான புதிய கோட்பாடுகளின் படி பேரியம் நைட்ரேட் அடிப்படையாகக் கொண்ட பசுமை பட்டாசுகள் உற்பத்தி செய்ய முடியும்.

 

இதனால் பட்டாசுகளில் மாசுபடுவதை 50 சதவீதம் குறைக்க முடியும். இந்த புதிய உற்பத்தி முறையை பட்டாசு உற்பத்தியாளர்கள் பயன்படுத்திக்கொள்ள ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply