ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உள்ள நளினிக்கு மீண்டும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினிக்கு மேலும் மூன்று வாரம் பரோல் நீட்டிப்பு.அவரது மகளின் திருமணத்திற்காக பரோல் வழங்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் 3 வார காலத்திற்கு அவரது பரோலானது நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

நளினி ஏற்கனவே கடந்த முறை மனு தாக்கல் செய்த பொழுது தனது மகள் திருமண ஏற்பாடுகள் ஆறு மாதம் பரோல் வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை பரிசீலித்த தமிழக அரசு அந்தக் கோரிக்கையை நிராகரித்தது. அதன் அடிப்படையில் இந்த கோரிக்கையை பரிசீலித்து ஆறு மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 

அந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தபோது ஜூலை 5ஆம் தேதி ஒரு மாதத்திற்குள் வழங்க சிறைத் துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.தற்போது திருமண ஏற்பாடுகள் வேலை முடிவடையாததால் அந்த பரோலை மீண்டும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் ஆகஸ்ட் 8-ம் தேதி .தனக்கு மீண்டும் ஒரு மாத காலம் பரோல் வேண்டுமென நளினி தரப்பில் கூறப்பட்டது.

 

அந்த மனுவையும் நீதிபதி சுந்தரேஷ் மற்றும் நிர்மல்குமார் அமர்வு விசாரித்தது. அப்போது அவர்கள் ஏற்கனவே ஆறுமாத பரோல் கேட்டு இருந்த நிலையில் சிறை விதிகளின்படி 30 நாட்களுக்கு மேல் தொடர்ந்து கொடுக்க முடியாது என்பதால் முதலில் வழங்கப்பட்டதாகவும் அதன்பிறகு மூன்று வாரம் அல்லது ஒரு மாதம் காலம் வேண்டுமெனவும் கோரப்பட்டது. எனவே அவருக்கு மூன்று வாரங்கள் நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Leave a Reply