லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் திரும்ப பெறப்பட்டது

அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. நிலத்தடி நீரை எடுப்பதற்கு உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.

அதனடிப்படையில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கும் லாரி உரிமையாளர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஒருபுறம் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மறுபுறம் தங்கள் தரப்பு நியாயத்தை உணர்த்துவதற்காக வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தது போல் வேலை நிறுத்தமும் செய்து வந்துள்ளனர் லாரி உரிமையாளர்கள். பொதுமக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை எடுத்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஸ்ட்ரைக் திரும்ப பெறப்பட்டுள்ளது.


Leave a Reply