வைகை அணையில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக நாடகம் ஆடிய காதலன்!

தன்னை திருமணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். சொன்னபடியே நீர்தேக்கத்திற்குள் காதலன் குதித்து வி டகாதலியோ அங்கிருந்து சென்று விடுகிறார். இதனால் நீந்தி கரைக்கு வந்து விடுகிறார்கள். போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் இரண்டு நாட்களாக காதலனின் சடலத்தை தேடி ஏமாந்தது தான் மிச்சம்.

 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள நாகராஜ் என்பவரின் 24 வயது மகன் விஜய். திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்த விஜய் செய்த செயல் பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்கிறது. தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறி வைகை அணையில் குதித்து இவர் நீந்தி கரை சேர்ந்ததுள்ளார், என்பதை துறையினரும் தீயணைப்புத் துறையினரும் இரண்டு நாட்களாக இவரது சடலத்தை தேடி ஏமாந்து உள்ளனர்.

 

தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த விஜய் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். சிறுமியும் அவரும் பல இடங்களில் ஜோடியாக சுற்றித் திரிந்தனர். இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்ததும், அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆனால் விஜய் தொடர்ந்து சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதை எடுத்து மேஜையின் மீது போக்சோ சட்டத்தில் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

3 மாத சிறை வாசத்திற்குப் பின் அண்மையில் நிபந்தனை ஜாமினில் வெளிவந்த விஜய் தொடர்ந்து சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில்தான் சிறுமியை வைகை அணை பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். இருவரும் அங்கு சுற்றி பொழுதை கழித்தனர். பின்னர் புறப்படும் நேரத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என வற்புறுத்தியுள்ளார் விஜய்.

 

அவர்களுக்கு மறுப்பு தெரிவித்த நிலையில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி உள்ளார். சிறுமி அதனை அலட்சியம் செய்த நிலையில் திடீரென விஜய் நீர்தேக்க பகுதியில் குதித்துள்ளார். பயந்து போன சிறுமி அங்கிருந்து ஓடி வந்து தமது காதலன் குறித்த விவரத்தை காவல்துறையினருடன் தெரிவித்துள்ளார்.இதையடுத்து நிகழ்வு இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விஜய்யை தேடத் தொடங்கினர்.

 

இரவு வெகுநேரமாகியும் விஜயின் சடலம் கிடைக்கவில்லை. இதையடுத்து அடுத்த நாளும் விஜயின் சடலத்தை காவல்துறையினர் தேடி வந்தனர். ஆனால் சடலம் கிடைக்கவில்லை. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிட்டியது. இதனால் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்த போது உடலில் ஏற்பட்ட லேசான காயங்களுக்காக அவர் அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

 

திருமணத்திற்கு காதலியை சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி செய்துள்ளார் விஜய். ஆனால் அங்கிருந்து காதலி சென்று விட்டதைப் பார்த்த விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளார். விசாரணையில் குதித்த போது உடலில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது என தாமாகவே முன்வந்து சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதற்காக இளைஞர் ஒருவர் தற்கொலை நாடகம் ஆடிய காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களையும் அலைக்கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply