கிரண்பேடிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது !

புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் தலையிட துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலை இடுவதற்கு தடை கோரி லக்ஷ்மி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

வழக்கு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் என்று தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

 

புதுச்சேரி அரசு கொள்கை முடிவுகளை எடுக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்பட்டது, குறித்து மேலும் தெளிவுபடுத்த வேண்டும் எனில் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என உச்ச நீதிமன்றம அறிவுறுத்தியது. இதையடுத்து மத்திய உள்துறை தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி வினித் கோத்தாரி, சி.வி.கார்த்திகேயன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

 

புதுச்சேரி அரசியல் நடவடிக்கையில் கிரன்பேடிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க முடியாது என்று நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேல்முறையீடு மனுக்கள் செப்டம்பர் 4ம் தேதிக்குள் பதிலளிக்க லட்சுமி நாராயணனுக்கும், கிரண் பேடிக்கும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


Leave a Reply