கோவையில் திருமண கண்காட்சி துவங்கியது !!!

கோவை கொடிசியாவில் நடைபெற்று வரும் வெட்டிங் வைப் எனப்படும் திருமண கண்காட்சியை ஏராளமானவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.கோவை கொடிசியா அரங்கில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக மார்க் ஒன் ஈவென்ட்டின் வெட்டிங் வைப் எனப்படும் திருமண கண்காட்சி துவங்கியது.17 ந்தேதி துவங்கி 19 ந்தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில் திருமண நிகழ்ச்சியை திட்டமிடுபவர்கள், அலங்காரம் செய்வோர், ஆடை வாடிவாமைப்பாளர்கள், மலர் அலங்காரம் செய்வோர், திருமண அமைப்பாளர்கள், போட்டோகிராபர்கள், சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.

குறிப்பாக தங்கம் மற்றும் வைர நகைகளின் அணிவகுப்பு மற்றும். மிக நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் பிரைடல் கலெக்ஷன் நகைகள்,புதிய தொழில்நுட்பங்களில் உருவாக்கப்பட்ட எலக்ட்ரோ போமிங் நகைகள், எனாமல் பெயின்ட் நகைகள் மற்றும் முழுக்கவே வெள்ளியால் செய்யப்பட்ட மாலைகள் போன்ற புது வரவுகளும் கண்காட்சியில் இடம்பிடித்தன.

இதே போல திருமண சடங்குகளுக்கான பட்டுப்புடவைகள் மற்றும் டிசைனர் ப்ளவுஸ், ஆண்களுக்கான ஆடைகள், பெண்களுக்கான சிகை அலங்காரம் மற்றும் திருமணத்திற்கு வரும் விருந்தினருக்கு கொடுக்கப்படும் அன்பளிப்புகள் போன்றவைகளுக்கான ஸ்டால்களும் அமைக்கப்பட்டிருந்தன.இதனை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.


Leave a Reply