அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான நடன போட்டியில் கோவையை சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த ஒருவாரமாக உலக நாடுகளுக்கிடையேயான நடன போட்டியானது நடைபெற்றது.
இதில் ஆஸ்திரிலியா, தென் ஆப்பிரிக்கா ,ஆசியா, ஐரோப்பா,இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இப்போட்டியில் கோவையிலிருந்து ஏடி எஸ் குரு தலைமையில் சென்ற நபஃல்,அலீனா, ஷேன்ரா,நிகில்,பிகாந், அருமன்,ரெஷி ஆகிய 7 மாணவர்கள் கொண்ட குழு நடன போட்டியில் பல நாடுகளை வீழ்த்தி இறுதி போட்டியில் இந்தியாவை வெற்றிபெற செய்தனர்.இம்மாணவர்கள் இந்தியாவிற்கு பெருமையை சேர்த்தது மட்டுமல்லாமல் தமிழகத்திற்கும் பெருமையை சேர்ர்த்துள்ளனர் .
அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தடைந்த மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாகத்துடன் வரவேற்று அவர்களுக்கு மாலை அணிவித்து கட்டி அணைத்து இனிப்புகளை வழங்கியும், இந்தியாவின் தேசிய கொடியை முன்னிறுத்தி கொண்டாடினர்.