‘மஹா’ படத்தை அடுத்து தெலுங்கில் சந்தீப் கிஷன் உடன் ‘தெனாலி ராமகிருஷ்ணா பிஏபிஎல்’ என்ற காமெடி படத்தில் நடித்து வருகிறார் ஹன்சிகா. ஜி.நாகேஸ்வரரெட்டி இயக்கும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக வரலட்சுமியும் நடிக்கிறார்.
இந்த படத்தில் ஸ்டைலிஷான ஒரு தோற்றத்தில் நடித்து வருகிறார் ஹன்சிகா. அதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர், ஹன்சிகாவின் பிறந்த நாளான நேற்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சந்தீப் கிஷனைப் போலவே ஹன்சிகாவும் ஒரு வக்கில் வேடத்தில் நடிக்கிறார்.