தமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் விடுவிப்பு : ஆளுநர் உத்தரவு

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டனை விடுவித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

 

முதலமைச்சர் பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று மணிகண்டன் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக அமைச்சர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply