பெண் போல் வேடம் அணிந்து தப்ப முயன்ற ரவுடி..!

இளம்பெண் போல வேடமணிந்து சிறையில் இருந்து தப்ப நினைத்த ரவுடியை போலீசார் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தினர். பிரேசிலைச் சேர்ந்த போதைக் கும்பலின் தலைவன் கிளாவினா டா சில்வா. கடற்கரை ஓர கிராம மக்களை மிரட்டியும், மூளைச்சலைவை செய்தும் போதைப்பொருட்கள் விற்பனை செய்து வந்த சில்வா மீது நிறைய குற்ற வழக்குகள் இருந்துள்ளன. இதனை அடுத்து சில்வாவை கைது செய்த பிரேசில் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

 

சிறையில் இருந்த சில்வா எப்படியாவது தப்பித்து விட வேண்டுமென திட்டமிட்டுள்ளார்.அடிக்கடி தன்னை பார்க்க வரும் தன் மகளைப் போல வேடமணிந்து தப்பிக்கலாம் என திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளார். தன்னுடைய செல்வாக்கின் மூலம் மாஸ்க், தலைமுடி, உடை ஆகியவற்றை சிறைக்குள் வரவழைத்த சில்வா, தன் மகள் தன்னை பார்க்க வந்த நாளன்று திட்டத்தை அரங்கேற்றினார்.

பெண் போல வேடமணிந்து சிறையில் இருந்து வெளியே வந்த சில்வா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அழைத்து விசாரணை நடத்திய போலீசாரிடம் சில்வா வசமாக சிக்கினார். வேடத்தை கலைக்கக்கூறி போலீசார் கூறியதும், மாஸ்க், உடை என அனைத்தையும் கலைத்தார் சில்வா. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சிறைக்குள் சில்வாவுக்கு மேஸ்க், உடையெல்லாம் எப்படி வந்தது என்று விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply