உளுந்துார்பேட்டை அருகே முறை தவறிய உறவை வெளியே சொல்லி விடுவாரோ என்ற அச்சத்தில் தம்பியை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் அண்ணன், அக்கா, சித்தி ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த அயன்குஞ்சரம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி ஆதிபராசக்தி. இவர்களது மகன்கள் சரத்குமார், 20; சிவகுமார், 15; மகள் சவுந்தர்யா, 17.
கேசவன், இரண்டு மாதங்களுக்கு முன், சவுதி நாட்டுக்கு சென்றார். சரத்குமாரும், சவுந்தர்யாவும் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றனர்.சிவகுமார் மட்டும் எலவனாசூர்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார்.இவர், கடந்த, 28ம் தேதி, வீட்டில் இருந்து, 2 கி.மீ., துாரத்தில் உள்ள, காப்புக்காட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.நேற்று காலை சிவக்குமாரின் அண்ணன் சரத்குமார், வி.ஏ.ஓ., வெற்றிவேலிடம் சரணடைந்தார்.
போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.விசாரணையில், சரத்குமாருக்கும் கேசவன் தம்பி அல்லிமுத்து மனைவி புஷ்பாவிற்கும், 30; இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. அதுமட்டுமின்றி தனது தங்கையான சவுந்தர்யாவுடனும் தொடர்பு இருந்துள்ளது. அண்ணன், தங்கை இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த, 28ம் தேதி, ஆதிபராசக்தி வெளியூர் சென்றிருந்தார். அப்போது சிவக்குமார், விளையாடி விட்டு வீட்டிற்குள் வந்தபோது, அங்கு சரத்குமாரும், சவுந்தர்யாவும் உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.இருவரையும் கண்டித்துள்ளார்.
சரத்குமாரும், சவுந்தர்யாவும் தம்பி சிவக்குமாரை சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை.எங்கே, இந்த சம்பவத்தை தாயிடம் கூறி விடுவாரோ என பயந்த, சரத்குமாரும், சவுந்தர்யாவும் சேர்ந்து, தம்பி சிவக்குமாரை கொலை செய்ய முடிவு செய்தனர்.சவுந்தர்யாவையும், புஷ்பாவையும் தனித்தனியாக காட்டிற்கு வரும்படி கூறிவிட்டு, சிவக்குமாரை, சரத்குமார் அன்று மதியம், 3:30 மணியளவில் காட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு, மலை இடுக்கில் உடும்பு சென்றுள்ளதாக கூறி சிவக்குமாரை குனிந்து பார்க்கும்படி கூறியுள்ளார்.
சிவக்குமார் குனிந்து பார்த்தபோது, சரத்குமார், கரும்பு வெட்டும் கத்தியால் சிவகுமாரின் கழுத்தை அறுத்துள்ளார். சவுந்தர்யாவும், புஷ்பாவும் சிவக்குமாரின் இரு கால்களையும் பிடித்துக் கொண்டனர். அங்கு சிவக்குமாரை காணவில்லை என அனைவரும் தேடியபோது, மூவரும் உறவினர்களுடன் சேர்ந்து தேடி நாடகமாடியதும், பின்னர் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் இனி தப்பிக்க முடியாது என தெரிந்ததால், வி.ஏ.ஓ.,விடம் சரணடைந்தது விசாரணையில் தெரிய வந்தது.எலவனாசூர்கோட்டை போலீசார், சவுந்தர்யா, புஷ்பா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.