ரூ.999 இல் விமானத்தில் பறக்கலாம்.. அதிரடி சலுகை

இண்டிகோ ஏர்லைன் தொடங்கி 13 ஆண்டுகளை கடந்து விட்டதால் பல சிறப்பு சலுகைகளை வெளியிட்டுள்ளது.  இந்தியாவின் உள்நாட்டு விமான சேவை கட்டணம் ரூ999 முதல் மற்றும் சர்வதேச விமான சேவை கட்டணம் ரூ3499 முதல் தொடங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

 

இந்த சலுகைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் கடந்த ஜூலை 31 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளலாம். இந்த சலுகை ஆகஸ்ட் 15 முதல் மார்ச் 31, 2020 வரையிலான பயணிகளின் பயணங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

 

இது போக எஸ் பேங்க் கார்டுகளை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு டிக்கெட் புக் செய்தாலோ ரூபாய்.2000 கேஷ்பேக் வழங்கப்படும்.அதுவும் குறைந்த பட்ச புக்கிங் ரூபாய் 10,000 ஆக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.இது மட்டுமல்லாமல் பேங்க் ஆப் பரோடா மற்றும் டெபிட் கார்டுகளின் மூலம் புக்கிங் செய்தால் காஷ்மீராக ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி உண்டு என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Leave a Reply