கோவையில் முதன் முறையாக சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி நடைபெற உள்ளது

EEPC இந்தியா சார்பாக நம் நாட்டின் உயர்நிலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு திறன் மற்றும் உற்பத்தி செயல்திறன்களை தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறையில் உலகளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுக்கு எடுத்து காட்டும் விதமாக கோவையில் சர்வதேச பொறியியல் ஆதார கண்காட்சி நடைபெற உள்ளது.9 வது ஆண்டாக கோவையில் முதன் முறையாக நடைபெறும் இக்காண்காட்சி வரும் 2020 ஆண்டு மார்ச் மாதம் 4 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

 

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. கண்காட்சி குறித்து EEPC யின் இந்திய தலைவர் ராகேஷ் ஷா பேசுகையில் உயர் தொழில்நுட்ப பொறியியல் ஏற்றுமதிகளுக்கு குறிப்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு, மிகவும் மேம்பட்ட மற்றும் நம்பத்தக்க கொள்முதல் மையமாக தமிழகம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக மும்பை,பெங்களூர்,புனே,சென்னை போன்ற மெட்ரோ நகரங்களுங்கு அடுத்த படியாக கோவையை இந்த கண்காட்சி நடத்த தேர்வு செய்துள்ளதில் பல்வேறு காரணங்கள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், ஜவுளித்துறை சிறு குறு தொழில் மற்றும் மோட்டார் மற்றும் பம்ப் செட்,கிரைண்டர் தயாரிப்பு,கிரைண்டர் தயாரிப்பு என கோவை நகரம் பல்வேறு தொழில் சார்ந்த விசயங்களில் வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவித்தார்.

மேலும்,மத்திய வர்த்தக அமைச்சகம் மற்றும் கனரக தொழில்துறையின் ஆதரவோடு EEPC இந்தியா, இந்த கண்காட்சியை கோவையில் நடத்த உள்ளதாகவும்,இதில் வெளிநாடு உள்நாடு என 400 க்கும் மேற்பட்ட முன்னனி தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.இந்த சந்திப்பின் போது,EEPC இந்தியாவின் சுரஞ்சன் குப்தா,மற்றும் ரூட்ஸ் நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் சந்திர சேகர் உட்பட கொடிசியா,இந்திய தொழில் வர்த்தக சபை,MSME என கோவையின் பல்வேறு தொழில் துறை அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply