கோவை பிஎஸ்ஜி தொழில் நுட்ப கல்லூரியின் வெள்ளி விழாவில் முன்னாள் மாணவர்கள் சார்பாக 65 லட்சம் ரூபாய் நன்கொடையை கல்லூரிக்கு வழங்கினர்.கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி எஸ் ஜி தொழில்நுட்ப கல்லூரியில் 94-95ஆம் ஆண்டு பொறியியல் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் வெள்ளி விழா சந்திப்பு நடைபெற்றது.
இதில் தொழில் முனைவோர், காப்புரிமை பெற்றவர்கள்,முனைவர் பட்டம் பெற்றவர்கள்,மற்றும் உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பணி புரியும் தொழில் தலைவர்கள் என 200க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.விழாவில்முன்னாள் மாணவர்கள் தாங்கள் பெற்ற தொழில் வெற்றிக்கு ஆசிரியர்களின் பங்களிப்பை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மறைந்த முன்னாள் மாணவர்களின் நினைவு உதவி தொகையாக ஜிஆர்டி அருங்காட்சியாகத்திற்கு 65 லட்சம் நன்கொடையாக பிஎஸ்ஜி அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கினர்.இதில் முன்னாள் மாணவர்கள் சங்க அறக்கட்டளையின் தலைவர் நந்தகுமார், ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.