பங்கி ஜம்ப் விளையாட்டின் போது கயிறு அறுந்து விழுந்ததில் இளைஞர் காயம்

இளைஞர் படுகாயம்.போலந்து நாட்டில் பங்கி ஜம்ப் விளையாட்டின் போது கயிறு அறுந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.ஜிடினியா என்ற இடத்தில் பங்கி ஜம்ப் விளையாட்டு கிரேன் உதவியுடன் நடந்து வருகிறது. இந்த விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளைஞர் ஒருவர் சுமார் 330 அடி உயரத்திற்கு கிரேனில் உள்ள கூடை மூலம் உச்சத்திற்குச் சென்றார்.

பின்னர் அங்கிருந்து குதித்த போது, காலில் கட்டப்பட்ட கயிறு அறுந்தது. இதனால் அவர் தரையில் காற்று நிரப்பப்பட்டிருந்த பையில் விழுந்தார். அப்போது தலைகுப்புற விழுந்ததால் கழுத்தில் எலும்பு உடைந்து பலத்த காயம் ஏற்பட்ட அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Leave a Reply