அமெரிக்க வனவிலங்கு பூங்காவில் சிறுமியை காட்டெருமை தாக்கியதால் சிறுமி படுகாயம்

அமெரிக்க வனவிலங்கு பூங்கா ஒன்றில் சிறுமியை காட்டெருமை தாக்கியதால் பதட்டம் ஏற்பட்டது. வயோமிங், மொன்டானா மற்றும் ஐடஹோவின் சில பகுதிகளை உள்ளடக்கிய யெல்லோஸ்டோனுக்கு ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளை காண பயணம் செய்கிறார்கள்.

இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை யெல்லோஸ்டோன் தேசிய வனவிலங்கு பூங்காவில் வழக்கம் போல மக்கள் விலங்குகளை கண்டு ரசித்து வந்தனர்.சுமார் 20 நிமிடங்கள் காட்டெருமைக்கு அருகில் நின்று கொண்டிருந்த 50 பேர் கொண்ட குழுவில் புளோரிடாவின் ஒடிஸாவைச் சேர்ந்த சிறுமி, இருந்துள்ளார்.

 

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் காட்டெருமை ஒன்று ஆக்ரோஷமாக அருகில் நின்று கொண்டிருந்த சிறுமியை தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு வனத்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். உடல்நலம் தேறியதும் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Leave a Reply