கோவையில் ரத்த தான முகாம்

வருமான வரி விதிப்பின் 159வது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற ரத்த தானம் முகாம் கோவையில் இன்று நடைபெற்றது.இந்தியாவில் வருமான வரி விதிப்பின் 159வது ஆண்டை முன்னிட்டு கோவையில் ரத்த தானம் முகாம் நடைபெற்றது.

வருமான வரித்துறை பணியாளர்களின் பங்களிப்பை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 24ஆம் தேதி வருமான வரி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ் கோர்ஸில் உள்ள அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை எழுதுதல், வண்ணம் தீட்டுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.

மேலும், 159 ஆண்டுகளாக தேசத்திற்கு வருமானவரித்துறை அளித்து வரும் பங்களிப்பை குறிக்கும் வகையில், வெள்ளலூர் ஏரி கரையில் பல்வேறு வகையான 159 மரக்கன்றுகள் நடப்பட்டன.தொடர்ந்து, சிறப்பான முறையில் வரி செலுத்துபவர்கள், சிறந்து விளங்கும் வருமான வரித்துறை பணியாளர்களும் கௌரவிக்கும் விதமாக விழா நடத்தப்படவுள்ளது.


Leave a Reply