கர்நாடக சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு- கர்நாடக ஆளுநர்

கர்நாடக சட்டப்பேரவை நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், மஜத மற்றும் சுயேட்சைகள் உட்பட 16 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதாலும், அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாலும் கர்நாடக அரசு கவிழும் நிலையில் உள்ளது. நேற்றைய கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமளியால் அவை இன்று ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்னும் நடைபெறவில்லை.

 

நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநர் அறிவுறுத்தியிருந்தார்.இதைத்தொடர்ந்து இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநர் வஜுபாஸ் லாலா கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு கெடு விதித்துள்ளார். இதனால் அங்கு அரசியல் பதட்டம் அதிகரித்துள்ளது.


Leave a Reply