’நான் தம் அடிச்சா உங்களுக்கு என்ன பாஸ்?…உங்க வேலையை மட்டும் பாருங்க’…புகையும் ரகுல் ப்ரீத் சிங்.!

தெலுங்குப் படம் ஒன்றுக்காக நடிகை ரகுல் ப்ரீத் சிங் செம ஸ்மார்ட்டாக தம் அடிக்கும் காட்சி ஒன்று வலை தளங்களில் வைரலாவதோடு, மக்கள் அதை அளவுக்கு அதிகமாக நக்கல் அடித்து வருகின்றனர். தெலுங்குப் படம் ஒன்றுக்காக நடிகை ரகுல் ப்ரீத் சிங் செம ஸ்மார்ட்டாக தம் அடிக்கும் காட்சி ஒன்று வலைதளங்களில் வைரலாவதோடு, மக்கள் அதை அளவுக்கு அதிகமாக நக்கல் அடித்து வருகின்றனர்.

 

தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’,’சூர்யாவின் ‘என்கேஜி’படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கில் பிசி நடிகையாக வலம் வருகிறார். லேட்டஸ்டாக இவர் நாகார்ஜுனாவுடன் ஜோடி சேர்ந்துள்ள ‘மன்மதடு 2’படத்துக்காக தம் அடிக்கும் காட்சிகளில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் சில தினங்களுக்கு முன் வெளியான நிலையில் அதில் ரகுல் தம் அடிக்கும் காட்சியைப் பார்த்த மக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து அவரை அளவுக்கு அதிகமாகக் கலாய்த்து வந்தனர். ’ஒரிஜினலாவே இப்பிடி ஒரு பழக்கம் இல்லாமலா இந்தப்பொண்ணு இவ்வளவு ஸ்மார்ட்டா தம் அடிக்குது?’என்ற கமெண்டுகளே அதிகம் வந்துள்ளன.

 

இந்நிலையில் அந்த கமெண்டுகளைப் பார்த்து கடுப்பான ரகுல் பிரீத் சிங் ‘என்னுடைய பெர்சனல் பற்றி உங்களுக்கு ஏன் தேவையில்லாத அக்கறை? அந்தப் படத்தின் நாயகி கேரக்டர் தம் அடிக்கும் இயல்பு கொண்டவள் என்பதால் இயக்குநர் சொன்னதைக்கேட்டே நான் புகை பிடித்தேன். அது குறித்து கமெண்ட் அடிப்பவர்கள் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தலாம்’என்று பொங்கியுள்ளார்.


Leave a Reply