மசாஜ் சென்டரில் பாலியல் தொந்தரவு

சென்னையில் உள்ள நீலாங்கரை அடுத்த வேட்டுவங்கேனி பகுதியில் தனியார் மசாஜ் பார்லர் ஒன்று இயங்கி வருகிறது.அந்த பார்லருக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வார்கள்.இந்நிலையில் அந்த பார்லரில் மசாஜ் செய்பவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை சில இளைஞர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை காட்டி பார்லர் உரிமையாளரிடம் பணம் பறித்து வந்துள்ளனர்.

 

இதே மாதிரி இவர்கள் வேறு சில பார்லர்கலீல் வீடியோ எடுத்து அங்குள்ள பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளனர்.இது குறித்து புகார் தெரிவிக்க அச்சத்தில் உரிமையாளர்கள் இருந்துள்ளனர்.பின்னர் வேட்டுவங்கேனி பார்லரில் இருந்து காவல்துறையினருக்கு ஒரு புகார் வந்துள்ளது.புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சில இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

பின்னர் தப்பி ஓடிய இளைஞர்களை விரட்டி பிடிக்கையில் அவர்களின் கைகள் முறிந்துள்ளன.இதன் காரணமாக விசாரணை நடத்திய காவல்துறையினர் செல்வம்,குமரன்,தர்மா,பிரபாகரன்,சதீஷ்,விக்னேஷ் போன்ற இளைஞர்களின் பகுதிகள் தெரிய வந்துள்ளது.

 

மேலும் இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக அடையாறு மற்றும் வேளச்சேரியில் உள்ள பார்லர்களில் வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்துள்ளது.


Leave a Reply