நாடு வளம் பெற மத்திய,மாநில அரசுகள் இணைந்து பாதாள நீர் வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் – அரசியல் சார்பற்ற இளைஞர் மக்கள் இயக்கம் கோரிக்கை.

வேளாண்மை மற்றும் நீர் மேலாண்மை துறையில் நாடு வளம் பெற மத்திய,மாநில அரசுகள் இணைந்து பாதாள நீர் வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அரசியல் சார்பற்ற இளைஞர் மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

கோவையில் அரசியல் சார்பற்ற இளைஞர் மக்கள் இயக்கத்தின் கிளை துவக்க விழா தடாகம் சாலை இடையர்பாளையத்தில் நடைபெற்றது.விழாவில் கிளை அலுவலகத்தை நவ்டெக் தலைவர் ஏ.சி.காமராஜ் திறந்து வைத்தார்.

 

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இளைஞர் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் சிவசுரேஷ், தற்பொழுது இந்தியாவில் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள சூழ்நிலையில் இதனைப் போக்கவும் விவசாயம் காக்கவும் புதிய முயற்சியாக இளைஞர் மக்கள் இயக்கம் சார்பாக பாதாள நீர்வழிச் சாலைகளை அமைத்திட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த திட்டத்தை செயல் முறை படுத்தினால் நீர்வழிப் போக்குவரத்து, நீர்ப் பாசனம், வேளாண் உற்பத்தித் திறன், நீர் மின்சக்தி, பல்துறை வேலை வாய்ப்புகள் பெருகும்.

ரயில் போக்குவரத்தை விட, இரு மடங்கு செயல்திறனும்; சாலைப் போக்குவரத்தைவிட எட்டு மடங்கு செயல் திறனுமுள்ள நீர்வழி போக்குவரத்து, ஆற்றல் வளங்களை பாதுகாப்பதில், மிகப் பெரிய அளவு அரசுக்கு உதவும். எனவே இதை, அரசு – தனியார் கூட்டு முயற்சியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவித்த அவர், இதில், மத்திய – -மாநில அரசுகள், கூட்டாக இறங்க வேண்டும் என கூறிய அவர் குறிப்பாக கிராமத்தில் வாழும் கிராம விவசாயாகளுக்காகவும் குடிநீர் பஞ்சத்தை போக்கவும் மிகவும் ஏதுவாக இந்த திட்டம் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இத்திட்டத்தினால் சுமார் 12 ஆயிரம் கிராம மக்கள் பயன்பெறுவர் இந்த பாதாள நீர்வழிச் சாலை திட்டம் மற்றும் நவீன நீர்வழிச் சாலை திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு விவசாயம் கல்வி உள்ளிட்ட பல்வேறு வகையில் பயன்படும் இத்திட்டமானது சுமார் 20 வருடங்களுக்கு முன்பு ஐயா ஏ.சி காமராஜ்,அப்துல் கலாமுடன் இணைந்து இத்திட்டத்தை வகுப்பதற்கான முயற்சியினை மேற்கொண்டவர் என அவர் தெரிவித்தார்.


Leave a Reply