மாநிலங்களவைக்கு 6 பேர் எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு!

Publish by: --- Photo :


தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 6 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலில் சட்ட மன்ற எம்‌எல்‌ஏக்கள் எண்ணிக்கைப்படி அதிமுக, திமுக சார்பில் தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். அதன் அடிப்படையில் அதிமுக சார்பில் முகமது ஜான், சந்திர சேகரன், அன்புமணி ஆகியோர் போட்டியின்றி தேர்வு ஆகின்றனர். திமுக கூட்டணி ஒப்பந்தம் படி, மதிமுக சார்பில் வைகோ வேட்பு மனு தாக்கல் செய்தார்.

 

இருப்பினும், தேச துரோக வழக்கில் அவருக்கு ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டதால் வைகோவின் வேட்பு மனு ஏற்கப்படுமா? என குழப்பம் ஏற்பட்டது. அவரின் வேட்பு மனு ஏற்கப்பட்ட நிலையில் மாற்று வேட்பாளர் என்.ஆர். இளங்கோ வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதனை அடுத்து திமுக கூட்டணி சார்பில் வைகோ, தொமுசாவை சேர்ந்த சண்முகம்,வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் மாநிலங்களைவைக்கு செல்கின்றனர்.


Leave a Reply