சட்ட பேரவைக்கு பட்டு நிற ” ஜிப்பா” அணிந்து வந்த துறை முருகன்

சட்டபேரவைக்கு எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் ஜிப்பா அணிந்து வந்தார். சட்ட பேரவை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் திமுக கரை போட்ட வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து வருவதை துரைமுருகன் வழக்கமாக கொண்டு இருந்தார். இந்நிலையில் இன்று சட்ட பேரவை கூட்டத்திற்கு பட்டு நிற ஜிப்பா அணிந்து வந்து துரைமுருகன் பங்கேற்றார். மினுமினுக்கும் ஜிப்பாவில் வந்த துரைமுருகனை கண்ட பேரவை உறுப்பினர்கள் பலரும் திடீர் உடைமாற்றம் குறித்து அளவளாவினர். சபாநாயகர் தனபால் எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகனை பார்த்து என்ன ஜிப்பாலாம் போட்டு கலக்குறீங்க எனக் கேட்டார். அதற்கு பதில் அளித்த துரைமுருகன் எனக்கு ஜிப்பா நல்லா இருக்குல்ல என்று சபாநாயகரிடம் கேட்டார்.


Leave a Reply