பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு

முன்னேறிய வகுப்பை சேர்ந்தவர்களில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதனை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை சட்ட பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின் 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துகளை கேட்டு அறிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 69 சதவீத இட ஒதுக்கீடு கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

 

10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேசி ஒரு மனதாக எடுக்கப்படும் முடிவே பின்பற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்க இன்று மாலை 5.30 மணிக்கு தலைமை செயலகத்தில் அனைத்து கட்சிகளின் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை பொருத்து தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply