சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் அரசின் முயற்சியை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் செயல்படும் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து தனியார் நிருவனங்களிடம் ஒப்பந்த புள்ளியும் கோரப்பட்டு உள்ளது. இவ்வாறு சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து உருக்காலை தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். உருக்கு ஆலையின் நுழைவு வாயிலில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சில தொழிற்சங்க நிர்வாகிகளும், தொழிலாளர்களும் பங்கேற்று உள்ளனர்.


Leave a Reply