கோவையில் நடைபெற்ற பேக்கரி பொருட்கள் கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று வித்தியாசமான பேக்கரி பொருட்களை காட்சிப்படுத்தி உள்ளனர்

இந்தியாவில்,குறிப்பாக தென் மாநிலங்களில் ரொட்டி,பிஸ்கட்,கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தயாரிக்கும் பேக்கரி துறை,சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது.இந்நிலையில் பேக்கரி துறையில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் கோவையில் பேக்கரி துறை தொடர்பான கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் துவங்கியது.

இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இதில் பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் நவீன கருவிகள், பேக்கரி உணவுப் பொருட்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பேக்கரி மற்றும் உணவு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அரங்குகள்,பேக்கரி உணவு சேவை,மூலப்பொருட்கள்,சுவையூட்டும் பொருட்கள்,சாக்லேட் மற்றும் நவீன இயந்திரங்கள் சம்பந்தமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கண்காட்சியில் தமிழகம்,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பேக்கரி துறையை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

 

பேக்கரி இயந்திரங்கள்,உற்பத்தியாளர்கள் பங்கேற்க உள்ளதால்,பேக்கரி பொருட்களின் தயாரிப்பாளர்கள்,விற்பனையாளர்கள் நேரடியாக சந்தித்து பல புதிய தொழில்நுட்ப கருவிகளை பார்த்து தங்களுக்கு தேவையானவற்றை அறிந்து கொள்ளும் அரங்காக இந்த கண்காட்சி அமைந்து உள்ளதாக இதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.


Leave a Reply