கூடங்குளம் கிராம சபை கூட்டத்தில் அணு கழிவு மையம் அமைப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்த தீர்மானத்தை முதலில் அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் பொது மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். கூடங்குளம் அணுக்கழிவு மையங்களை கூடங்குளத்தில் வைக்க கூடாது என கூடங்குளம் கிராம சபை கூட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனால், கூச்சமும் குழப்பமும் ஏற்பட்டது. கிராம சபை கூட்டத்தில் இதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர். இதற்கு அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கவில்லை. தொடர்ந்து கிராம ஊராட்சி அலுவலகத்தில் கிராம சபை கூட்டத்தில் அணுக்கழிவு வைக்க அனுமதிக்க கூடாது என ஊர் பொது மக்களின் தீர்மானமாக அங்கு நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அங்கு கூட்டம் அமைதியாக முடிவடைந்தது.